ரஜினி, விஜய், சூர்யா, தனுஷ் படங்களை ஒரே நேரத்தில் தயாரிக்கும் நிறுவனம்!

திங்கள், 26 அக்டோபர் 2020 (10:47 IST)
ரஜினி, விஜய், சூர்யா, தனுஷ் படங்களை ஒரே நேரத்தில் தயாரிக்கும் நிறுவனம்!
தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், சூர்யா மற்றும் தனுஷ் ஆகியோரின் படங்களை ஒரே நேரத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் செய்தி கோலிவுட் திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது 
 
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல் தளபதி விஜய் நடிக்கும் ’தளபதி 65’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் தெரிந்ததே 
 
மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி சூர்யாவின் 40வது படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தை பாண்டிராஜ் இயக்கவுள்ளார். இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களான ரஜினி விஜய் சூர்யா தனுஷ் ஆகியோரின் படங்களை ஒரே நேரத்தில் ஒரு நிறுவனம் தயாரிப்பது இதுவே முதல் முறை என கருதப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்