தனுஷின் கால்ஷீட் டைரில் புல்… செல்வராகவன் படத்தின் ஹீரோ இவரா?

செவ்வாய், 27 அக்டோபர் 2020 (10:31 IST)
இயக்குனர் செல்வராகவன் இயக்கும் புதிய படத்தில் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

நடிகர் தனுஷ்தான் இன்றைய சூழ்நிலையில் அதிகமான படங்களைக் கையில் வைத்திருக்கும் நடிகர். வரிசையாக படங்களின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கும் தனுஷ் தனது முன்னாள் மேனேஜர் வினோத் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். இந்த படத்தை அவரது அண்ணனான செல்வராகவன் இயக்குவார் என சொல்லப்பட்டது. அந்த படத்துக்காக இசையமைப்பாளராக ஷான் ரோல்டனும் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

ஆனால் இப்போது தனுஷ் வரிசையாக பல படங்களில் நடித்து வருவதால் இந்த படத்தை ஆரம்பித்ததற்கு இன்னும் குறைந்தது ஆறு மாத காலமாவது ஆகும் என்பதால் செல்வராகவன் குறுகிய காலத்தில் ஒரு படத்தை எடுத்து முடிக்க உள்ளாராம். அந்த படத்துக்காக நடிகர் கவுதம் கார்த்திக்கிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்