தெலுங்கு இயக்குனரை டீலில் விட்ட தனுஷ்! கடும் அதிருப்தியில் படக்குழு

சனி, 17 ஜூன் 2023 (07:48 IST)
நடிகர் தனுஷ் நடித்த  முதல் நேரடி தெலுங்குப் படமான ’வாத்தி’ திரைப்படம் சில மாதங்களுக்கு முன்னர் ரிலீஸாகி கவனம் பெற்றது. தற்போது அருண் மாதேஸ்வரன் நடிப்பில் உருவாகிவரும் ’கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனுஷ் ஏற்கனவே ஒப்பந்தமான தெலுங்கு படத்தில் இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் நடிக்கும் படத்தின் பூஜை கடந்த ஆண்டு நடைபெற்றாலும் இன்னும் ஷூட்டிங் தொடங்கப்படவில்லை. இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பதாக இருந்தது.

இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தை முடித்துவிட்டு தனுஷ் தன்னுடைய 50 ஆவது படத்தில் கவனம் செலுத்த உள்ள நிலையில் சேகர் கமுலா படத்தைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் தனுஷ் மீது சேகர் கமுலா அதிருப்தியில் உள்ளதாக சொல்லப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்