தனுஷின் ராயன் பட ரிலீஸ் எப்போது?.. புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

vinoth

செவ்வாய், 11 ஜூன் 2024 (07:45 IST)
தனுஷ் தனது 50 ஆவது படமான ராயன் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தை தனுஷே இயக்கியுள்ளார். இந்த படத்தில் தனுஷோடு எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன் மற்றும் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.  இந்த படத்துக்காக மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றிய தனுஷ் மொத்த காட்சிகளையும் 110 நாட்களில் முடித்தார்.

இதையடுத்து இந்த திரைப்படம் ஜூன் 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. அதற்கானக் காரணங்கள் தெரியவில்லை. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

படம் ஜூலை 26 ஆம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸாகவுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்