தனுஷ் பிறந்த நாளில் கொழுந்தியாள் செளந்தர்யா கொடுத்த மறக்க முடியாத பரிசு

செவ்வாய், 9 மே 2017 (22:20 IST)
தனுஷ் இயக்கிய 'பவர் பாண்டி' திரைப்படம் ஒருபக்கம் 25வது நாள் என்ற மைல்கல்லை எட்டிய நிலையில் தனுஷ் நடித்த 'விஐபி 2' படத்தின் ரிலீஸ் தேதி இன்னொரு பக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.



 


'விஐபி 2' திரைப்படம் வரும் ஜூலை 28ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. செளந்தர்யா ரஜினி இயக்கிய இந்த படம் ரிலீஸ் ஆகும் ஜூலை 28ஆம் தேதி தனுஷின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் அதிகம் இருந்தாலும் தனுஷ் பிறந்த நாளில் இந்த படத்தை வெளியிட்டு அவருக்கு மறக்க முடியாத பிறந்த நாள் பரிசாக இந்த படம் இருக்க வேண்டும் என்று இரவுபகலாக போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணியை கவனித்து வருகின்றாராம் செளந்தர்யா

சீன் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த படத்தில் தனுஷ், அமலாபால், கஜோல், சமுத்திரக்கனி, சரண்யா, விவேக், மோனல் கஜ்ஜார், ரிஷிகேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்