ரஜினியின் ‘கூலி’ படத்தில் நடிப்பதை உறுதி செய்த அமீர்கான்…!

vinoth

புதன், 11 ஜூன் 2025 (10:09 IST)
தமிழ் சினிமாவில் இன்று மோஸ்ட் வாண்டட் இயக்குனராக அனைத்து ஹீரோக்களாலும், தயாரிப்பு நிறுவனங்களாலும் விரும்பப்படுகிறார் லோகேஷ் கனகராஜ். அதற்குக் காரணம் குறுகிய காலத்தில் முன்னணி நடிகர்களை வைத்து சூப்பர் ஹிட் படங்களை அடுத்தடுத்துக் கொடுத்து வருகிறார்.

தனது இயக்குநர் பயணத்தை "மாநகரம்" திரைப்படம் மூலம் தொடங்கினார். அதன் பின்வரும்  "கைதி", "மாஸ்டர்", "விக்ரம்", "லியோ" போன்ற வெற்றிப்படங்களை இயக்கி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர். தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தை இயக்கி வருகிறார். இதன் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

கூலி படம் ஒரு மல்டி ஸ்டார் படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் சௌபின் சாஹிர், உபேந்திரா, நாகார்ஜுனா, சத்யராஜ் உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். அதே போல ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் அமீர்கான் நடிக்கவுள்ளதாக சொல்லப்பட்டு வந்தது. அதை இப்போது அமீர்கான் உறுதி செய்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த நேர்காணலில் “கூலி படத்தில் என்னுடைய கதாபாத்திரம் சுவாரஸ்யமான ஒன்றாக இருக்கும். அந்த கதாபாத்திரம் அனைவருக்கும் பிடிக்கும்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்