தனுஷின் ‘வாத்தி’ இசை வெளியிட்டு தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு!
புதன், 1 பிப்ரவரி 2023 (21:23 IST)
தனுஷின் ‘வாத்தி’ இசை வெளியிட்டு தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு!
தனுஷ் நடித்த ‘வாத்தி’ என்ற திரைப்படம் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தேதியை சற்று முன் பட குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
தனுஷ் நடித்த ‘வாத்தி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் வரும் பிப்ரவரி 4ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் உள்பட படக்குழுவினர் இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்
இதுகுறித்து வீடியோ வெளியாகி உள்ள நிலையில் அந்த வீடியோவை தனுஷ் ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகிய ‘வாத்தி’ படத்தில் தனுஷ், சம்யுக்தா ஹெக்டே, சாய்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் இந்த படம் உருவாகியுள்ளது.