தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ ரிலீஸ் தேதி இதுவா?

வியாழன், 17 மார்ச் 2022 (17:33 IST)
தனுஷ் நடித்த மாறன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி 100% நெகட்டிவ் விமர்சனங்களை பெற்ற நிலையில் அவர் நடித்துள்ள அடுத்த திரைப்படமான திருச்சிற்றம்பலம் ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது
 
தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன
 
இந்த நிலையில் இந்த படம் ஜூலை 1ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் ஒரு சில நாட்களில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
தனுஷ் ஹீரோவாக நடித்திருக்கும் இந்த படத்தில் ராஷி கண்ணா, நித்யா மேனன் மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளனர். இந்த படத்தில் பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்