எப்போது தொடங்குகிறது பா ரஞ்சித் & விக்ரம் திரைப்படம்!

புதன், 16 மார்ச் 2022 (10:28 IST)
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.

இயக்குனர் பா ரஞ்சித் மற்றும் விக்ரம் கூட்டணி குறித்து கடந்த சில வருடங்களாகவே பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை கே ஈ ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லபடுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் கதைக்களம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. கோலார் தங்க சுரங்கத்தில் வேலை செய்த தமிழர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக உள்ளதாக சொல்லபடுகிறது. மேலும் இந்த சுதந்திரத்துக்கு முன்னர் நடக்கும் கதைக்களமாக இருக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் கோலார் தங்க வயல்களில் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. சர்வைவர் ஆக்‌ஷன் திரைப்படமாக இந்த படம் உருவாக உள்ளதாக தெரிகிறது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போது அதிகமாகியுள்ளது.

இந்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் இப்போது நடந்துகொண்டிருக்கும் நிலையில் மே மாதம் படப்பிடிப்பு தொடங்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்