அஜித்தின் அடுத்த படத்தை தயாரிக்கும் லைகா: 2022 இறுதியில் படப்பிடிப்பு ஆரம்பம்!

செவ்வாய், 15 மார்ச் 2022 (14:49 IST)
அஜித்தின் அடுத்தடுத்த மூன்று படங்களை போனிகபூர் தயாரித்த நிலையில் அவருடைய அடுத்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
அஜித் நடித்து வரும் 61வது படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் இந்த படத்தோடு போனிகபூர் அஜித் நடித்த மூன்று படங்களை தயாரித்து விட்டார் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை யார் தயாரிப்பார் என்ற கேள்வி எழுந்த நிலையில் தற்போது வந்திருக்கும் செய்திகளின்படி லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது 
 
இந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இந்த படத்தை விக்னேஷ் சிவன் அல்லது விஷ்ணு வர்த்தன் ஆகிய இருவரில் ஒருவர் இயக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்