இந்நிலையில் இந்த படம் 190 நாடுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம், பிரஞ்ச், ஜெர்மன், இத்தாலியன், போலிஷ், போர்ச்சுகீஸ், பிரேசிலியன், ஸ்பானிஷ் (காஸ்ட்டிலியன்), ஸ்பானிஷ் (நியூட்ரல்), தாய், இந்தோனேசியன், வியட்நாமிஸ் ஆகிய மொழிகளில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி ட்ரெண்டிங்கில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், சுருளியாக தனுஷ் நடித்துள்ள, 2 மணி நேரம் 37 நிமிடம் ஓடக்கூடிய ஜகமே தந்திரம் படம் நாளை(18 ஆம் தேதி)ரிலீஸாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ள நிலையில்
இந்தியாவில் நண்பகல் 12: 30 மணிக்கும் அமெரிக்காவில் அதிகாலை 12 மணிக்கும்( தற்போது), இங்கிலாந்தில் காலை 8 மணிக்கும், ஜப்பானில் மாலை 4 மணிக்கும், இப்படம் வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனுஷ் தற்போது நெட்பிளிக்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் தி கிரே மேன் The Gray man என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இயக்குநர்களான Russo Brothers இப்படம் வெற்றி பெற வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் தங்களின் டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
சூப்பர் டா தம்பி! தனுஷுடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது. ஜகமே தந்திரம் குழுவுக்கு எங்கள் வாழ்த்துகள் எனத் தெரிவித்து, இப்படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர். இது வைரலாகி வருகிறது.