தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் அறிமுகமாகி படங்களில் நடிக்க தொடங்கியவர்கள் சிம்புவும் தனுஷும். இருவருமே பன்முகத்திறமை கொண்டவர்கள். தனுஷ் தொடர்ந்து நடிப்புக்கு வாய்ப்புள்ள படங்களாவும், வெற்றிப் படங்களாகவும் நடித்த நிலையில் சிம்புவுக்கு வரிசையாக வெற்றிப்படங்கள் அமையவில்லை. சமீபத்தில் மாநாடு என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தை அவர் கொடுத்தார்.
இந்நிலையில் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகவும், அந்த படத்தை நடிகர் தனுஷே இயக்க உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.