கடைசியில தனுஷ் பொறப்பயே பொய்யுனு சொல்லிட்டாங்களே!!

வியாழன், 9 பிப்ரவரி 2017 (13:00 IST)
மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி ஆகியோர், நடிகர் தனுஷ் எங்களுடைய மகன். அவர் பராமரிப்பு தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என்று மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.


 
 
ஆனால் அவர்கள் கூறும் தகவல் உண்மையானது இல்லை என்றும், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகர் தனுஷ், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். 
 
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அதில், எந்தவித ஆதாரமும், ஆவணங்களும் இல்லாமல் இந்த வழக்கை நடிகர் தனுஷ் தாக்கல் செய்துள்ளார். 
 
மேலும், சென்னை எழும்பூர் மகப்பேறு ஆஸ்பத்திரியில் அவர் பிறந்ததாகவும், சாலிக்கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்ததாகவும், தனது இயற்பெயர் வெங்கடேஷ்பிரபு என்றும் அவர் கூறியிருப்பது பொய். அவர் எங்களுடைய மகன் தான் என்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன என தெரிவித்துள்ளனர்.
 
மேலும், எங்களுக்கு வாழ்வாதாரம் எதுவும் இல்லாததால் தான் பராமரிப்புத் தொகை கேட்டு வழக்கு தொடர்ந்தோம். எனவே எங்களுக்கு பராமரிப்பு தொகை வழங்கவும், அவர் தொடர்ந்த வழக்கை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.  

வெப்துனியாவைப் படிக்கவும்