திடீரென உயர்ந்த இதயதுடிப்பு… மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீபிகா படுகோன்!

புதன், 15 ஜூன் 2022 (09:32 IST)
தீபிகா படுகோன் தற்போது பிரபாஸ் மற்றும் அமிதாப் பச்சன் நடிக்கும் புதிய படததில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

பாகுபலி புகழ் பிரபாஸ் நடிக்கவிருக்கும் 21 வது படம் குறித்த அதிரடி அறிவிப்புகள் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகின. கீர்த்தி சுரேஷ் நடித்த ’நடிகையர் திலகம்’ என்ற ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கும் இந்த படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

பிரபாஸ் நடிக்கவிருக்கும் 21 வது படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நாயகியாக நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இப்போது இந்த படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடந்துவரும் நிலையில் படப்பிடிப்பில் கலந்துகொண்ட தீபிகா படுகோனுக்கு திடீரென்று இதய துடிப்பு அதிகமாகியுள்ளது. இதையடுத்து அவர் ஐதராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உடல்நிலை சரியானதும் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்