உங்க மேனேஜர மரியாதையா பேசச் சொல்லுங்கள் வெற்றிமாறன்… பிரபல நடிகை தீபா வெங்கட் வைத்த குற்றச்சாட்டு!

vinoth

திங்கள், 22 ஜூலை 2024 (14:25 IST)
இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகி வரும் படங்களில் ஒன்று மாஸ்க். இந்த படத்தை அறிமுக இயக்குனர் விகர்ணன் அசோக் இயக்க இந்த படத்தில் கவினுடன் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனமும், ப்ளாக் மெட்ராஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. சமீபத்தில் இந்த படத்தின் பூஜை கடந்த மாதம் நடந்த நிலையில் நேற்று ஷூட்டிங் தொடங்கியுள்ளது. குரோம்பேட்டையில் ஷூட்டிங் தொடங்கியுள்ள சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மொத்த ஷூட்டிங்கும் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதன் ஷூட்டிங் இப்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்தில் தனக்கு நடந்த மோசமான சம்பவத்தை பிரபல நடிகையும் பின்னணிக் குரல் கலைஞருமான தீபா வெங்கட் பதிவு செய்துள்ளார். அதில் “மாஸ்க் படத்தில் கலைஞர்களுக்கு மிகவும் கம்மியாக சம்பளம் பேசுகிறார்கள். குறைந்த பட்சம் உங்கள் மேனேஜரிடம் மரியாதையாகவாவது பேச சொல்லுங்கள். வெற்றிமாறன் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தாலும் சுயமரியாதைதான் முக்கியம் என அந்த படத்தில் இருந்து விலகிவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்