3 குற்றவியல் சட்டங்கள் குறித்த திமுகவின் வழக்கு: மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

Mahendran

வெள்ளி, 19 ஜூலை 2024 (12:54 IST)
புதிதாக அமலுக்கு வந்துள்ள 3 குற்றவியல் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனு தாக்கல் செய்திருந்த நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
 
இன்றைய விசாரணையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளன என கூறிய நீதிபதிகள், சட்டத்தை அமல்படுத்துவதற்கு முன் சட்ட ஆணையத்தை ஆலோசித்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். மேலும் மத்திய அரசு 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
முன்னதாக  மத்திய அரசு பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷிய அதினியம் என்ற பெயரில் 3 புதிய சட்டங்கள் ஜூலை 1 முதல் அமல்படுத்தியது. இந்த புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள்  நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.
 
மேலும் திமுகவில் உள்பட சில தமிழக அரசியல் கட்சிகளும் காங்கிரஸ் உள்பட தேசிய அரசியல் கட்சிகளும் இந்த புதிய குற்றவியல் சட்டத்திற்கு எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறது என்பதும் இந்த நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் இந்த சட்டத்தை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
Edited by 
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்