2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான திரைப்படம் என்னு நிண்டே மொய்தீன். இந்த படத்தில் ப்ருத்விராஜும், பார்வதியும் நடித்திருந்தனர். இந்த படத்தின் எல்லா பாடல்களும் ஹிட்டான நிலையில் குறிப்பாக முக்கத்த பெண் என்ற பாடல் மொழி தாண்டியும் லட்சக்கணக்கான ரசிகர்களால் ரசிகக்ப்பட்டது.
இந்நிலையில் இந்த பாடலை இப்போது மீளுருவாக்கம் செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார் திவ்யதர்ஷினி. அதில் அவரே நடித்தும் உள்ளார். இதுகுறித்து அவர் இந்த பாடலுக்கு நான் மிகவும் அடிமையகிவிட்டேன். என்னுடன் நடித்த கிரிஷ் மிகச்சிறப்பான பணியை செய்துள்ளார், இந்த முயற்சி ரசிகர்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறேன் எனக் கூறியுள்ளார். இந்த பாடலை சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்ய பலருடைய பார்வைக்கும் சென்றுள்ளது.