சிம்புவுக்கு உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!

புதன், 10 அக்டோபர் 2018 (12:52 IST)
நடிகர் சிம்புவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 
அரசன் என்ற புதிய படத்தில் நடிக்க பேஷன் மூவி மேக்கர்ஸ்  நிறுவனத்திடம் சிம்பு 50 லட்சம் ரூபாய்  முன் பணத்தை திருப்பி தரவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் பேஷன் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த, நீதிபதி எம்.கோவிந்தராஜ் , பணத்தை திரும்ப கொடுக்க சிம்புவுக்கு 4 வார கால அவகாசம் வழங்கியிருந்தார். ஆனால் இன்னும் பணம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
 
இந்நிலையில், “வட்டியுடன் சேர்த்து ரூ 85 லட்சத்தை அக்டோபர் 31ஆம் தேதிக்குள் உத்தரவாதமாக செலுத்த வேண்டும். தவறினால் சிம்புவுக்கு சொந்தமான கார், மொபைல், பிரிட்ஜ், ஏசி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் ஜப்தி செய்ய வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்