இந்நிலையில் காந்தியின் நினைவுநாளான ஜனவரி 30 ஆம் தேதி ஓடிடியில் நான் ஏன் காந்தியைக் கொன்றேன் என்ற கோட்சேவின் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம் தொடர்பான திரைப்படம் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கு தடைவிதிக்க வேண்டும் மகாராஷ்டிரா காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த படத்தில் கதாநாயகனாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம் பி யான அமோல் கோல்ஹே நடித்திருந்தார். அவருக்கும் இப்போது கண்டனங்கள் எழுந்துள்ளன.