அவர் என்ன தீவிரவாதியா…. ஏன் ஜாமின் கொடுக்க மறுக்கிறீர்கள்? ராஜ் குந்த்ரா வழக்கறிஞர் வாதம்!

புதன், 28 ஜூலை 2021 (18:05 IST)
நேற்று ராஜ்குந்த்ராவின் ஜாமீன் மனுவை மும்பை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.

பிரபல பாலிவுட் நடிகையும் தமிழில் ஒரு சில படங்களில் நடித்தவருமான ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா. இவர் மும்பையில் நேற்று திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். ஆபாச படங்களை தயாரித்து செல்போன் செயலிகள் மூலம் இவர் பணம் சம்பாதிப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. 

ராஜ்குந்த்ராவின் கைது பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெண்கள் 3 பேர் தங்களை கட்டாயப்படுத்தி ஆபாச படத்தில் நடிக்க வைத்ததாக கூறி ராஜ்குந்த்ரா மீது புகார் அளித்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில் அவருக்கு நீதிமன்றம் 3 நாட்கள் போலிஸ் காவல் அளித்து சிறையில் அடைத்துள்ளது.அந்த காவல் இன்றோடு முடியும் நிலையில் மேலும் 3 நாட்களுக்கு காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நீட்டிக்கப்பட்ட காவல் நேற்றோடு முடிந்த நிலையில் அவரின் ஜாமீன் மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் அவரின் ஜாமீன் மனுவை நிராகரித்தது. அதற்கு ராஜ் குந்த்ராவின் வழக்கறிஞர் ‘அவர் என்ன தீவிரவாதியா? ஏன் அவரின் ஜாமீனை நிராகரிக்கிறீர்கள்?’ எனக் கேள்வி எழுப்ப அரசு வழக்கறிஞர் ‘ஏற்கனவே பல டிஜிட்டல் ஆதாரங்களை ராஜ் குந்த்ரா அழித்துள்ளார். வெளியில் விட்டால் மேலும் பல ஆதாரங்களை அழித்து விடுவார்’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்