மலையாள சினிமா நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. இவர் விஷாலின் ஆக்சன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். இவர் தற்போது தனுஷின் ஜகமே மந்திரம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் ரிலிஸுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில், ஐஸ்வர்யா லட்சுமிக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார்.