தவறான மெசேஜ் அனுப்பியரை அம்பலப்படுத்திய நடிகை

சனி, 15 மே 2021 (22:36 IST)
ஆபாச மெசேஜ் அனுப்பிய நபரை அனைவருக்கும் தெரியப்படுத்தியுள்ளார் பிரபல நடிகை .

பிரபல தனியார் சேனலில் நடைபெற்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று பிரபலமானவர் சவுந்தர்யா. இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளரகாப் பங்கேற்றதன் மூலம் இவருக்கு அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர்.

இதையடுத்து விஜய் தொலைக்காட்சியில் பகல் நிலவு என்ற சீரியலில் நடிக்கத் தொடங்கினார். அதில் தற்போது முக்கிய நடிகையாக ரேவதி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் ஒரு யுவர்ஸ் ஷேம்புலி என்ற ஷார்ட் ஃபில்மில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

இந்நிலையில், இவரது சமூகவலைதளப் பக்கத்தில் ஒருவர் தவறான மெசேஸ் அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது. எனவே அவரது மெசேஜ் மற்றும் பெயரை அனைவருக்கும் தெரியும்படி ஸ்கீரின் ஷாட் எடுத்து பதிவிட்டுள்ளார். அந்த நபருக்கு கண்டனங்களும் விமர்சனங்களும் குவிந்து வருகிறது.
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Soundarya Bala Nandakumar (@soundarya_offl)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்