''விஜய் 66 ''பட போஸ்டர் காப்பியா? ரசிகர்கள் அதிர்ச்சி

புதன், 22 ஜூன் 2022 (16:14 IST)
தமிழ்சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவரது நடிப்பி வம்சி இயக்கத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகி வரும் பிரமாண்ட படம் விஜய்66. இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்  விஜய் பிறந்த நாளையொட்டி ஒரு நாள் முன்னதாக நேற்று வெளியானது. அதில், விஜய்66 படத்திற்கு  வாரிசு என்று ,  the boss returens என்று பெயரிடப்பட்டுள்ளது.

அதில்,  விஜய் ஒரு அலுவலகத்தில் அமர்ந்திருப்பது போன்ற போஸ்டர் வரவேற்பை பெற்ற நிலையில், இன்று விஜய் பிறந்த நாளுக்கு மற்றொரு போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், வாரிசு பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரின் பேக்கிரவுண்ட் அமெரிக்காவில் உள்ள ஒரு ஐ இன்ஸ்டிட்டியூட்டின் படம் என்று, அதைக் காப்பியடித்து, இதில், இப்படத்தின் டிசைனர் அப்படியே வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இப்படத்தில் டிசைனருடைய சம்பளம் ரூ.14 லட்சம் எனவும்,இவர் தான் செக்கச் சிவந்த வானம் படத்திற்கு டிசைனர் எனக் கூறப்படுகிறது.  இதனால், தயாரிப்புக் குழு மற்றும் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்