பிக்பாஸ் போய்ட்டு வந்தாலும் எந்த பயனும் இல்ல… கூல் சுரேஷ் நக்கல் பேச்சு!

vinoth

செவ்வாய், 13 மே 2025 (09:48 IST)
தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகராக இருந்து வருபவர் கூல் சுரேஷ். ஆனாலும் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியாக எந்த வேடமும் கிடைத்து அவருக்கு ஒரு திருப்புமுனை அமையவில்லை. சில ஆண்டுகளாக அவர் தியேட்டர்களுக்கு முதல் நாள் முதல் காட்சி சென்று படத்தைப் பற்றி ஆஹோ ஓஹோவெனப் புகழ்ந்து பேசி வைரல் ஆனார்.

பல திரைப்படங்களுக்கும் முதல் நாள் முதல் காட்சிக்கு சென்று மிகை உணர்ச்சியோடு அவர் பேசுவது ரசிகர்களுக்கு வேடிக்கையாக அமைந்தது. மேலும் கூல் சுரேஷ் பணம் வாங்கிக் கொண்டு படங்களுக்கு விமர்சனம் செய்து வருகிறார் என்று கருத்துகளும் எழுந்தன. அவருக்குக் கிடைத்த இந்த பிரபல்யத்தால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆனாலும் அவருக்குப் பெரிதாக எந்த வாய்ப்புகளும் அமையவில்லை.

இந்நிலையில் கூல் சுரேஷ் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும்போது பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தாக்கிப் பேசியுள்ளார். அதில் “பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்தாலும் பெரிதாக எந்த பயனும் இல்லை. நானும்தான் சென்றேன். ஆனால் நான் 100 நாள் வேலைக்குதான் சென்றேன். எனக்கு அப்போது வேலை இல்லை. அதனால் சென்றேன். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்து யாராவது வெளியேத் தெரிந்தவர்களா இருக்கிறார்களா? பிக்பாஸ்க்கு போயிட்டு வந்தவர்களை நீங்கள் படத்தில் போட்டால் நீங்கள் முதலீடு செய்தது 1000 ரூபாயாக இருந்தாலும் 1000 கோடி ரூபாயாக இருந்தாலும் அது திரும்ப வராது” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்