வெந்து தணிந்தது காடு பார்க்க ஆடி காரில் வந்த கூல் சுரேஷ்…. ஆர்வத்தில் கண்ணாடியை உடைத்த ரசிகர்கள்!
வியாழன், 15 செப்டம்பர் 2022 (15:41 IST)
ஆரம்பம் முதலே வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை பற்றி பேசி பேசி ப்ரமோஷன் செய்தவர் கூல் சுரேஷ்.
சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் இன்று ரிலீஸான நிலையில் படத்தைப் பார்க்க சிம்புவின் தீவிர ரசிகர் என்று சொல்லிக்கொள்ளும் கூல் சுரேஷ் சிவப்பு நிற ஆடி காரில் திரையரங்குக்கு வந்தார். அப்போது அவரைப் பார்த்த ரசிகர்கள் உற்சாக மிகுதியில் கார் மீது ஏறி ஆட்டம் போட கண்ணாடி உடைந்து சேதாரம் ஆனது.
கூல் சுரேஷ் கொண்டு வந்த கார் ஒரு வாடகை நிறுவனத்தின் கார் என்று சொல்லப்படுகிறது. இதுபற்றி வீடியோவில் பேசிய அவர், மிகவும் தர்மசங்கடமான நிலைமையை ரசிகர்கள் உருவாக்கி விட்டனர் என்று ஆதங்கத்தோடு தெரிவித்துள்ளார்.