வெந்து தணிந்தது காடு எப்படி இருக்கு?.... முதல் காட்சி பார்த்த ரசிகர்களின் விமர்சனம்!

வியாழன், 15 செப்டம்பர் 2022 (08:56 IST)
சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.

மாநாடு திரைப்படத்துக்கு பிறகு சிம்பு நடித்துள்ள திரைப்படமான வெந்து தணிந்தது காடு திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தில் சிம்பு – கௌதம் – ஏ ஆர் ரஹ்மான் ஆகிய வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். சிம்புவின் மாநாடு படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

இந்நிலையில் இன்று காலை படம் ரிலீஸ் ஆன நிலையில் சிறப்புக் காட்சி பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துகளை சமூகவலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். பெருவாரியான ரசிகர்கள் படம் நன்றாக இருப்பதாகவும், சிலர் படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றும் கலவையான விமர்சனங்களை தெரிவித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக சிம்பு ஏற்ற முத்து கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்