"பிக்பாஸ் வீட்டில் எதிரொலிக்கும் தண்ணீர் பஞ்சம்" கமலுக்கு குவியும் பாராட்டுக்கள்!

திங்கள், 24 ஜூன் 2019 (12:06 IST)
பிக் பாஸ் தமிழின் மூன்றாம் பாகம் நேற்று(ஜூன்.23) தொடங்கியது. வழக்கம் போல கமல்ஹாசனே தொகுத்து வழங்க, பிரம்மாண்டமாய் இந்த நிகழ்ச்சியின் முதல் எபிசோட் ஒளிபரப்பானது.
 

 
கடந்த இரண்டு சீசன்களை விட நிகழ்ச்சியை ஸ்வாரஸ்யமாக்க பல புது முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். அந்தவகையில் இந்த கோடை வெயிலில் சென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தை பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பணக்கார போட்டியாளர்களுக்கு தெரிவுப்படுத்தும் விதத்தில் தண்ணீர் அளவோடு உபயோகிக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
இதனை நேயர்களுக்கு விளக்கிய கமல் கூறியதாவது, "நீச்சல் குளத்தை பார்த்து "சொன்னதை செய்தார்களா என்று பார்த்தேன். செய்துவிட்டார்கள். ஊரே தண்ணி இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் போது இங்கே ஜலக்கிரீடை செய்து கொண்டிருந்தால்.பணக்காரத் திமிரு என்று ஏழைகளுக்கு கோபம் வரும். அதனால் நீச்சல் குளத்தில் தண்ணீர் வேண்டாம் என்று நான் கூறினேன். 


 
அதற்கு அவர்கள் நீச்சல் குளமே வேண்டாமா என்று என்னிடம் கேட்டனர். நான் இருக்கட்டும் என்று கூறினேன் காரணம் தண்ணீருக்காக படும் கஷ்டத்தை பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் அறிந்து கொள்ள இந்த வெற்றான நீச்சல் குளம் மட்டும் இருக்கட்டும்’ என்று கூறினேன் என்றார் கமல்.
 
இதுபோல் நீச்சல் குளம் மட்டுமின்றி சமையல் அறையில் கூட அளவான தண்ணீர் தான் போட்டியாளர்களுக்கு வழங்கப்படும். இதற்காக தண்ணீரை குறிக்கும் ஒரு அளவு கோளும் சமையல் அறையில் பொறுத்தப்பட்டுள்ளது. 


 
ஏழை எளிய மக்கள் கோடை வெயிலில் தண்ணீருக்காக அல்லல்படும்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் செய்துள்ள இந்த மாற்றத்தை சமூகவலைத்தளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்