காமெடி நடிகர் சதீஸுக்கு விருது....

திங்கள், 8 ஆகஸ்ட் 2022 (17:08 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர் சதீஸுக்கு விருது கிடைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் ஜெர்ரி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனவர் சதீஸ். இவர், ஏ.எல்.விஜய்யின் மதராசப்பட்டினம், பைரவா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார்.

சமீபத்தில் இவர் நாய் சேகர் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.

இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இப்படத்தில் ஹிரோவாக நடித்ததற்காக சதீஸுக்கு அறிமுகம் ஹீரோவுக்காக விருதை ஒரு தனியார் நிறுவனம் வழங்கியுள்ளது.

இந்த விருதுடன் நடிகர் சதீஸ் தனது சமூக வலைதளத்தில் புகைப்படத்தைப் பதிவிட்டு,  நாய் சேகர் பட இயக்குனருக்கும், இப்படக்குழுவினருக்கும்  நன்றி தெரிவித்துள்ளார். ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

Thank u so much

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்