"நான் கெட்டவனுக்கெல்லாம் கெட்டவன்டா" - வெளியானது மாரி 2 ட்ரைலர்!

புதன், 5 டிசம்பர் 2018 (11:20 IST)
தனுஷின் மாரி  2 ட்ரைலர் வெளியானது ! 

2015-ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘மாரி'. பாலாஜி மோகன் இயக்கியிருந்த இப்படம் மாஸ் ஹிட்டானது. இதில் தனுஷுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். தற்போது, மீண்டும் தனுஷ் – பாலாஜி மோகன் கூட்டணி ‘மாரி 2'-விற்காக கைகோர்த்துள்ளது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ‘ப்ரேமம்' புகழ் சாய் பல்லவி டூயட் பாடி ஆடியுள்ளார்.
 
முதல் பாகத்தில் அனிருத் இசையமைத்திருக்க, இரண்டாவது பாகத்தில் களமிறங்கியிருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.
 
கிருஷ்ணா, வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மலையாள நடிகர் டோவினோ தாமஸுக்கு வில்லன் கதாபாத்திரமாம். இந்த படத்திற்கு  ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரசன்னா படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை தனுஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்' மூலம் தயாரித்துள்ளார்.
 
இந்நிலையில் மாரி 2 டிரெய்லருக்காக தனுஷ் ரசிகர்கள் அனைவரும் ஆர்வத்துடன் காத்திருந்த தருணத்தில்  சற்றுமுன் ( 11 மணிக்கு ) டிரெய்லர் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.
 
"சாவ பத்தி கவலை படாதவனை சாவடிக்குறது ரொம்ப கஷ்டம்" என்ற  கிஷோரின் பயங்கரமான வாய்ஸ் ஓவரில் மாரி 2 ட்ரைலர் ஆரம்பமாகிறது.
 
முதல் பாகத்தில், ஃபேமஸான டயலாக் “செஞ்சிருவேன்”. இரண்டாம் பாகத்திலும் தனுஷ் செஞ்சிருவாரா என்பதை டிசம்பர் 21ம் தேதி காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

 

#Maari2 trailer .. https://t.co/NL0zQyCLZV .. #tharalocal #senjuruven #dec21release

— Dhanush (@dhanushkraja) December 5, 2018

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்