சினிமா பி.ஆர்.ஓ சங்க தேர்தல் முடிவுகள்!

வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (22:01 IST)
சினிமா பிஆர்ஓ சங்க தேர்தல் இன்று நடைபெற்றது என்பதும் இந்த தேர்தலில் ஒரு சில முக்கிய பி.ஆர்.ஓ போட்டியிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று நடந்த தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் தேர்தலில் டைமண்ட் பாபு அவர்கள் தலைவராக வெற்றி பெற்றார். இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
 
மேலும் தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் தேர்தலில் செயலாளர் பதவிக்கு யுவராஜ் அவர்களும் பொருளாளர் பதவிக்கு குமரேசன் அவர்களும் தேர்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது
 
இந்த நிலையில் பிஆர்ஓ தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் திரையுலகினர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா பிஆர்ஓ சங்கம் என்பது திரையுலகினரின் உள்ள முக்கிய சங்கங்களில் ஒன்று என்பதும் இந்த சங்கத்தில் சரியான உறுப்பினர்கள் தலைவர் பொருளாளர் செயலாளர் பதவிக்கு தேர்வு பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்