அதையடுத்து அந்த படத்தில் பணியாற்றிய இயக்குனர்கள் சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி, நடிகர் பொன்வண்ணன், பாடலாசிரியர் சினேகன், இயக்குனர் பாரதிராஜா, சேரன் மற்றும் கரு பழனியப்பன் உள்ளிட்ட பலர் இயக்குனர் ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதனால் ஞானவேல் ராஜா சமூகவலைதளங்களில் கடுமையாக எதிர்மறை விமர்சனங்களையும் கேலிகளையும் சந்தித்து வருகிறார். மேலும் சூர்யா, சிவகுமார் மற்றும் கார்த்தி ஆகியோருக்கும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் ஞானவேல் ராஜா தரப்பில் சிலரை அணுகி அமீருக்கு எதிராக பேச சொல்லி பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள் என பிரபல சினிமா பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறியுள்ளார். மேலும் தன்னையே அணுகி அமீருக்கு எதிராக ஒரு வீடியோ போட சொல்லி கேட்டார்கள். ஆனால் நான் அதை மறுத்துவிட்டேன் எனக் கூறியுள்ளார். அது போல மேலும் சில தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களையும் சந்தித்து இது சம்மந்தமாக ஞானவேல் ராஜா தரப்பு பேசியதாக அவர் கூறியுள்ளார்.