நடிகை சமந்தா சமீபத்தில் தனது விவாகரத்து மற்றும் புஷ்பா படத்தில் கவர்ச்சி நடனம் ஆகியவற்றால் மிகவும் பரபரப்பான நடிகையாக பேசப்பட்டு வருகிறார். இந்நிலையில் சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவரின் ரசிகர்களும் மாறி மாறி மற்றவர்களை குற்றம் சொல்லிக் கொண்டு வந்தனர். ஆனால் சமந்தா இதை எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் கூலாக சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.
இதையடுத்து தெலுங்கில் பல படங்களில் முன்னணி நடிகையாகவும் நடித்து வருகிறார். இப்போது தன் படங்களுக்கு தானே டப்பிங்கும் பேச ஆரம்பித்துள்ளார். இதுவரை அவரின் கதாபாத்திரங்களுக்கு தெலுங்கில் பாடகியும், சமந்தாவின் நெருங்கிய தோழியுமான சின்மயி குரல் கொடுத்து வந்தார். ஆனால் இப்போது சமந்தாவே டப்பிங் பேச ஆரம்பித்துவிட்டதால் “எங்கள் பயணம் முடிந்துவிட்டது” என சின்மயி கூறியுள்ளார்.