தற்போது தமிழ்நாட்டில் உள்ள பத்திரிக்கையாளர்களும் ஊடகங்களும் தனது தாயாருக்கு போன் செய்து தொல்லை தருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டிவிட்டரில் ‘பத்திரிக்கைகளுக்கும் ஊடகங்களுக்கும் எனது வேண்டுகோள். எனது தாய்க்கு போன் செய்து இது தொடர்பான கேள்விகளைக் கேட்டு தொல்லை செய்யாதீர்கள். அவர் 69 வயது நிறைந்த முதியவர். அவரால் ஓரளவுக்குதான் மன அழுத்தத்தைத் தாங்கமுடியும். தயவு செய்து செய்து போன் செய்வதை நிறுத்துங்கள். நன்றி.’ எனக் கூறி தனது ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளார்.