நடிகை சமந்தா சமீபத்தில் தனது விவாகரத்து மற்றும் புஷ்பா படத்தில் கவர்ச்சி நடனம் ஆகியவற்றால் மிகவும் பரபரப்பான நடிகையாக பேசப்பட்டு வருகிறார். இந்நிலையில் சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவரின் ரசிகர்களும் மாறி மாறி மற்றவர்களை குற்றம் சொல்லிக் கொண்டு வந்தனர். ஆனால் சமந்தா இதை எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் கூலாக சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.
அதுபோலவே சமுகவலைதளங்களில் தன்னுடைய புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களிடம் தொடர்பில் இருந்தவண்ணம் உள்ளார். இந்நிலையில் இன்று அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன. அதில் பாடகி சின்மயி அந்த புகைப்படங்களைப் பார்த்து வெகுவாகக் கவரப்பட்டு ஓ மை காட் என கமெண்ட் செய்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.