ஷாருக்கானுக்காக கார் கதவை திறந்த முதல்வர்; வைரலாகும் வீடியோ

சனி, 18 நவம்பர் 2017 (12:18 IST)
கொல்கத்தாவில் சர்வதேச திரைப்பட விழா கடந்த 10ம் தேதி துவங்கி நேற்று வரை நடைப்பெற்றது. விழாவில் சிறந்த படமாக, டூ லெட் என்ற தமிழ்படம் தேர்வாகியுள்ளது.

 
சர்வேதேச திரைப்பட விழாவில் மேற்கு வங்கம் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். இந்த தொடக்க விழாவில் பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். அதில் பாலிவுட் எஅடிகர் ஷாருக்கான், மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜி அழைத்ததின்பேரில் அங்கு சென்றார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அவர் விமான நிலையத்திற்கு கிளம்பினார்.
 
இந்நிலையில் ஷாருக்கானுக்கு விமானத்திற்கு நேரமாகிறது என்றதால் மமதா தனது ஹுன்டாய் சான்ட்ரோ காரில் விமான நிலையத்திற்கு லிஃப்ட் கொடுத்ததோடு, விமான நிலையத்தை அடைந்தவுடன் மமதா முதல் ஆளாக கீழே இறங்கி ஷாருக்கானுக்காக கார் கதவை திறந்துவிட்டார். காரில் இருந்து வெளியே வந்த ஷாருக்கான் கொஞ்சமும் தயங்காமல் தனக்காக கதவை திறந்துவிட்ட மமதாவின் காலை தொட்டு ஆசி பெற்றார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகி  வருகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்