ஓடிடியில் கால்பதிக்கும் இயக்குனர் சேரன்! முன்னணி நிறுவனத்தோடு ஒப்பந்தம்!

செவ்வாய், 22 மார்ச் 2022 (10:07 IST)
சோனி லிவ் தளத்துக்காக இயக்குனர் சேரன் ஒரு படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி ஏற்கனவே மூன்று திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான சேரன் இயக்கும் அடுத்த படத்தில் ஆரி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் கலையரசன், திவ்யபாரதி உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் மேலும் சில முக்கிய நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றதை அடுத்து விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த படம் திரையரங்க வெளியீடாக இல்லாமல் ஓடிடிக்காக தயாராகிறது. முன்னணி நிறுவனமான சோனி லிவ் தளம் பைனான்ஸ் செய்ய இந்த படத்தை தயாரித்து இயக்கிக் கொடுக்க உள்ளார் சேரன். சேரன் ஏற்கனவே விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர்களுக்கு கதை சொல்லி சம்மதம் வாங்கி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்