ஆஸ்கர் விருது பரிந்துரை… மத்திய அரசுக்கு சம்மந்தம் இல்லை!

வியாழன், 23 டிசம்பர் 2021 (10:49 IST)
ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பாக பரிந்துரை செய்யப்படும் படங்களுக்கும் மத்திய அரசுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து இந்த ஆண்டு ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்படும் படங்களின் பட்டியலில் சர்தார் உத்தம் சிங் படம் இடம்பெறாதது பல சர்ச்சைகளைக் கிளப்பியது. பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான கருத்துகளை அந்த படம் கொண்டிருப்பதால்தான் பரிந்துரைக்கப்படவில்லை என்றும் சொல்லப்பட்டது.

இது சம்மந்தமாக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனீஷ் தீவாரி எழுப்பிய கேள்விக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அளித்த பதிலில் ‘ஆஸ்கர் கமிட்டி, இந்தியாவில் பெடரேஷன் ஆஃப் இந்தியா என்ற தேர்வுக்குழு கமிட்டியை வைத்துள்ளது. அந்த கமிட்டிதான் படங்களை பரிந்துரை செய்கிறது. அதற்கும் மத்திய அரசுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை’ என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்