தமிழ் சினிமாவில் இந்த ஆண்டில் முக்கிய நடிகர்கள், இயக்குநர்கள் சிலர் இறந்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்த நிலையில் தற்போது,
மற்றோரு பிரபலம் காலமானார்.
சமீபத்தில்இயக்குநர் எஸ்.பி,ஜனநாதன் கொரொனாவால் பலியானார், நடிகர் விவேக் மாரடைப்பால் மரணமடைந்தார். இதையடுத்து, சூர்யா பட இயக்குநர் கே.வி.ஆனந்த் மாரடைப்பால் காலமானார். இதன்பின்பு நடிகரும், பன்முகக் கலைஞருமான பாண்டு சில தினங்களுக்கு முன்பு காலமானார்.
இவர் கொரொனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், இவர் தாதா 87 படத்தை தனது நண்பர் விஜய்ஸ்ரீ உடன் இணைந்து கலைச்செல்வன் தயாரித்தார். இவரது மறைவுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.