நடிகர் சிவாவின் நடிப்பிலும், சி.எஸ்.அமுதன் இயக்கத்திலும், சசிகாந்த் தயாரிப்பிலும் உருவான தமிழ்படம் 2 அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ்படம் முதல் பாகத்திலேயே ரஜினி, கமல் உள்ளிட்ட பலரையும் ஏகத்துக்கும் கிண்டலடித்திருந்தனர்.
இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாகத்தை தயாரித்த துரைதயாநிதி, தன் அனுமதி இல்லாமல் தமிழ்படம் என்ற தலைப்பை பயன்படுத்தி படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிட்டுள்ளனர் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் இப்படம் வசூலித்த மொத்த தொகையையும் முடக்கும் படி கோரிக்கை விடுத்துள்ளார்.