கோட் படத்தில் ஏ ஐ தொழில்நுட்பத்தில் கேப்டன்? பிரேமலதா விஜயகாந்த் அளித்த பதில்!

vinoth

செவ்வாய், 16 ஏப்ரல் 2024 (10:50 IST)
விஜய் தன்னுடைய அரசியல் கட்சியின் பெயரை அறிவித்துள்ளார். தற்போது நடித்து வரும் கோட் படத்துக்குப் பிறகு இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிப்பேன் என அறிவித்துள்ளார். இதனால் தற்போது அவர் நடித்து வரும் GOAT திரைப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் அவரோடு பிரசாந்த்,பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து வரும் நிலையில்  செப்டம்பர் 5 ஆம் தேதி இந்த படத்தின் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் ஏ ஐ தொழில்நுட்பம் மூலமாக ஒரு கதாபாத்திரமாக உருவாக்கப்பட உள்ளார் என செய்திகள் வெளியாகின.

இதுபற்றி பேசியுள்ள விஜயகாந்தின் மனைவி பிரேமலதா “இதுபற்றி வெங்கட்பிரபு எங்கள் வீட்டுக்கே வந்து கேட்டார். விஜய்யும் இந்த படத்தில் கேப்டன் இருக்கவேண்டும் என ஆசைப்படுகிறார். நான் இப்போது கேப்டன் இடத்தில் இருந்து யோசிக்கிறேன். விஜயகாந்தால் செந்தூரப்பாண்டி படத்தின் மூலம் அடையாளம் பெற்ற விஜய் கேட்கும்போது என்னால் முடியாது என்று சொல்லமுடியவில்லை. தேர்தல் முடிந்தவுடன் விஜய் என்னை நேரில் வந்து சந்திக்க உள்ளார். நான் அவர்களுக்கு நல்ல முடிவாக சொல்வேன்” எனக் கூறியுள்ளார். இதன்மூலம் கோட் படத்தில் விஜயகாந்த் வர இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்