’வல்லரசு’ படத்தை அடுத்து விஜயகாந்தின் ‘கேப்டன் பிரபாகரன்’ ரீரிலீஸ்.. சூப்பர் அறிவிப்பு..!

Mahendran

செவ்வாய், 15 ஏப்ரல் 2025 (14:00 IST)
கேப்டன் விஜயகாந்த் நடித்த வல்லரசு திரைப்படம் வரும் 18ஆம் தேதி ரீரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. அந்த நேரத்தில், அவர் நடித்த நூறாவது படமான கேப்டன் பிரபாகரன் படத்தையும் ரீரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதை அடுத்து, கேப்டன் ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டுள்ளது. 
 
விஜயகாந்த் நடிப்பில், ஆர்கே செல்வமணி இயக்கத்தில் உருவான கேப்டன் பிரபாகரன் திரைப்படம் கடந்த 1991ஆம் ஆண்டு வெளியானது. இந்த படம் 300 நாட்களுக்கு மேல் ஓடிய பிரம்மாண்டமான வெற்றி படம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த படத்தில் தான் மன்சூர் அலிகான் வில்லனாக அறிமுகமானார். மேலும், சரத்குமார், லிவிங்ஸ்டன்,  ரூபிணி, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டவர் இந்த படத்தில் நடித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
மாபெரும் வெற்றி பெற்ற இந்த படத்தை விரைவில் பெரிய திரையில் ரீரிலீஸ் செய்யப்பட உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசையில் உருவான இந்த படத்தை மீண்டும் பெரிய திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்