நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகிறார்கள். அவர்களின் திருமணத்திற்கு இருவீட்டாரும் சம்மதித்து விட்ட நிலையில், விக்னேஷ் அம்மாவுக்கு நயன்தாராவை மிகவும் பிடித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இந்த ஆண்டு திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் கடந்த ஆண்டே கேரளாவில் வைத்து ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில் ஹாலிவுட் பிரபலங்கள் மற்றும் இந்திய பிரபலங்களும் தங்களின் காதலரின் பெயரை குறிக்கும் வகையில் எழுத்து வடிவ கம்மல் அணிந்து காதலை வெளிப்படுத்துகிறார்கள்.