கலவையான விமர்சனங்கள்… பிரம்மாஸ்திரம் முதல் 2 நாள் வசூல் நிலவரம் என்ன?

ஞாயிறு, 11 செப்டம்பர் 2022 (14:09 IST)
இந்தியா முழுவதும் வெற்றிபெறும் படங்களை உருவாக்க தற்போது முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் களத்தில் இறங்கியுள்ளன. சில தென்னிந்திய படங்கள் கடந்த சில ஆண்டுகளில் அவ்வாறான வெற்றியைப் பெற்றதை அடுத்து பாலிவுட்டில் இருந்தும் தென்னிந்தியாவை குறிவைத்து படங்கள் உருவாகின்றன.

அந்தவகையில் ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப் பச்சன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள  பேன் இந்தியா திரைப்படமான ‘பிரம்மாஸ்திரம்’ இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது. வெளியானது முதல் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் இந்த படம் ஏமாற்றவில்லை என்று சொல்லப்படுகிறது.

இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் இந்த திரைப்படம் 60 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில மாதங்களாக பாலிவுட் படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வரும் நிலையில் பிரம்மாஸ்திரம் நம்பிக்கை அளிக்கும் விதமாக வசூலில் கோலோச்சுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்