பூமராங் படத்தை கைப்பற்றிய ஜி தமிழ்!

சனி, 9 மார்ச் 2019 (16:48 IST)
தமிழ் சினிமாவில் நன்றாக ஓடும் திரைப்படங்களுக்கு எப்போதும் தொலைக்காட்சிகளின் மத்தியில் கிராக்கிதான்.  இதனால் பிரபல நடிகர்களின் படம் வெளியாகும் முன்பே, ஏன் படத்தின் பூஜை ஆரம்பிக்கும் போது பல கோடிகளை கெடுத்து தொலைக்காட்சிகள் வாங்குகின்றன.


 
இந்நிலையில் அதர்வா, ஆர்,ஜே.பாலாஜி, ஆகாஷ் மேகா, சதீஷ் நடிப்பில் ஆர்.கண்ணன் இயக்கிய பூமராங் திரைப்படம் நேற்று வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. படம் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதனால் பூமராங் படத்தை ஜி தமிழ் தொலைக்காட்சிளை கோடிகளை கொட்டிக் கொடுத்து படத்தை ஒளிபரப்பும் உரிமையை கைப்பற்றியுள்ளது.


 
அண்மையில் விஜய் சேதுபதி, சீனுராமசாமி கூட்டணியில் உருவாகி வரும் மாமனிதன் படத்தின் சேட்லைட்ஸ் ரைட்ஸை ஜி தமிழ் வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்