தமிழில் கண்டேன் காதலை, ஜெயங்கொண்டான், சேட்டை போன்ற பல படங்களை இயக்கிய இயக்குனர் கண்ணன் தற்போது அதர்வாவை வைத்து ‘பூமராங்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் இன்று வெளியாகி திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில் ‘பூமராங்’ எப்படி இருக்கிறது என்ற விமர்சனத்தை தற்போது காணலாம்.
நடிகர்கள்:- அதா்வா,மேகா ஆகாஷ்,சதீஷ்,ஆா்.ஜே.பாலாஜி
இயக்கம்:- ஆா்.கண்ணன்
கால அளவு:- 1:30
கதைக்கரு:-
அரசியல் மசாலா திரைப்படமான பூமராங் படத்தில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் அதர்வா ஒரு மென்பொருள் நிறுவராக நடித்துள்ளார். இவரை கொலை செய்ய ஒரு கும்பல் திட்டமிட அதனை சுதாரித்துக்கொண்ட அதர்வா வேலையை ராஜினாமா செய்துவிட்டு சொந்த ஊருக்கு வருகிறார். அங்கு அரசியல்வாதிகள் செயல்படாமல் இருப்பதை தட்டிக் கேட்கிறார். தன் நண்பர்களுடனும் மக்களுடனும் சேர்ந்து போராட்டம் நடத்துகிறார். மேகா ஆகாஷை காதலிக்கிறார். வில்லனின் அடியாட்களிடம் இருந்து தப்பித்து அதர்வா தன் நோக்கத்தை நிறைவேற்றினாரா என்பது மீதிக் கதை.
கதைக்களம்:-
சொந்த ஊரில் தண்ணீர் பிரச்சினை தலைவிரித்து ஆட தனது கிராமத்தில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற தனது 2 நண்பர்களான ஆர்.ஜே பாலாஜி, இந்துஜாவுடன் சேர்ந்து பல தண்ணீர் பிரச்சனையை தீர்க்க முயற்சிகளை எடுக்கிறார்.
ஆனால் அது அங்கிருக்கும் அரசியல்வாதிகளுக்கு பிடிக்காமல் போக அவருக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது இறுதியில் தனது கிராமத்திற்காக சக்தி என்ன செய்தார். பிரச்சனைகளை எதிர்கொண்டு கிராம மக்களின் குறைகள் அனைத்தும் தீர்த்தாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தின் ப்ளஸ் :
மையக்கரு தான் படத்தின் மிகப் பெரிய பிளஸ். அதிரடி அரசியலுடன் நதிகள் இணைப்பை மையப்படுத்தி சுவாரசியமான திரைக்கதையுடன் படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் கண்ணன். கட்டான உடல்தோற்றத்துடன் அதர்வாவின் ஆக்க்ஷன் மற்றும் அதிரடி காட்சிகளில் பின்னணி இசை கைகொடுக்கிறது. மேலும், ஆர்ஜே பாலாஜி, அதர்வா, இந்துஜா வரும் காட்சிகள் தியேட்டரில் விசில் பறக்கிறது.
படத்தின் மைனஸ் :
தமிழ் சினிமா சினிமாவில் இதுபோன்று பல படங்கள் வந்துவிட்டது. இந்த படம் ஒன்றும் வித்தியாசமான கதை இல்லை. தற்போதுள்ள அரசியல்வாதிகளின் மெத்தனத்தை சுட்டிக் காட்டுவது தான் இப்படத்தின் மைய கதை ஆனால், ஏற்கனவே கேள்விப்பட்ட கதை என்பதால் கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்துகிறது. அதேபோல படத்தில் கதாநாயகியாக வரும் மேகா ஆகாஷ் படத்திற்கு எந்த விதத்திலும் பயனில்லை. படத்தின் இசையும் சொல்லிக்கொள்ளும்படி காதுக்கு இனிமை அளிக்கவில்லை. மொக்க காமெடியடித்து சதீஷ் கடுப்பேற்றுகிறார்.
இறுதி அலசல் :
அதர்வாவின் நடிப்பு மிகவும் பாராட்டக் கூடியது. இக்கால கட்டத்திற்கு தேவையான ஒரு சுமாரான படம் என்ற மனப்பக்குவதோடு தைரியமாக குடும்பத்துடன் ஒருமுறை கண்டு களிக்கலாம்.