சந்தானத்தின் பிஸ்கோத் பட"பேபி" பாடல் வீடியோ !

செவ்வாய், 24 நவம்பர் 2020 (11:01 IST)
காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக புரமோஷன் ஆன நடிகர் சந்தானம் பல படங்களில் வரிசையாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த ’டகால்டி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அடுத்ததாக பிரபல இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடித்த பிஸ்கோத் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. 
 
கடைசி நேரத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய வேண்டுமென்றால் ஒரு கோடி ரூபாய் வரை கட்டவேண்டும் என சொல்லப்பட்ட நிலையில் சந்தானம் 50 லட்சம் கொடுத்து உதவியுள்ளார். மேலும் அன்புச்செழியனும் அதுபோல பணம் கொடுத்து இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கண்ணனுக்கு உதவி செய்துள்ளார்.
 
படம் வெளியாகி ஓராவிற்கு வசூல் பெற்றது. இந்நிலையில் தற்ப்போது இப்படத்தில் இடம்பெற்ற பேபி சாங் என்ற வீடியோ பாடல் யூடியுபில் வெளியாகியுள்ளது. ஹீரோயினுடன் டூயட் பாடி ரொமான்ஸில் புகுந்து விளையாடும் சந்தானம் நம்ம கண்ணுக்கு மட்டும் காமெடியானாகவே தெரிகிறார். இதோ அந்த பாடல் வீடியோ.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்