பிகில்: தியேட்டரில் எல்லோரையும் அழ வைக்க போகும் பாட்டு இதோ - வீடியோ!

திங்கள், 21 அக்டோபர் 2019 (12:51 IST)
தமிழ் சினிமாவின் சூப்பர் மாஸ் ஹீரோவான விஜய் அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக பிகில் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில், விஜய் அப்பா – மகன் என்று இரு வேடங்களில் நடித்துள்ளார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். உடன்  யோகி பாபு, கதிர், விவேக், இந்துஜா, ஜாக்கி ஷரூப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா, தேவதர்ஷினி, ரெபா மோகா ஜான், வர்ஷா போலம்மா, ஐஎம் விஜயன் உள்பட பலர் நடித்துள்ளனர். 


 
ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தீபாவளி தினத்தில் சரவெடியாக வெடிக்கவுள்ள பிகில் திரைப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. ரிலீசுக்காக காத்திருக்கும் இப்படத்தின் கடைசிக்கட்ட வேலைகள் படு மும்முரமாக நடைபெற்று வருகிறது. 
 
இந்நிலையில் நேற்று இப்படத்தின் இடம்பெறவுள்ள பாடல் ஒன்றை படக்குழு யூடியூபில் வெளியிட்டது. பெண் இனத்தை போற்றும் வகையில் ஏ,ஆர் ரஹ்மானின் மெல்லிய இசையில் பாடலாசிரியர் விவேக்கின் அற்புதமான வரிகளில் உருவாகியுள்ள "மாதரே மாதரே மாதரே" என துவங்கும் இப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக "மார்பகம் போல எந்தன் மனதிற்கும் ஒரு உருவம் இருந்திருந்தால் ஆண் இனம் பார்த்திடும் அதையும்" என கண்கலங்க வைக்கும் வரிகள் இடம்பெற்றுள்ளது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்