பிக்பாஸ் எண்ட்ரி… கமலுக்காக நான்கு ப்ரோமாக்கள் ரெடி!

வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (16:40 IST)
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் ஐந்தாவது சீசன் இன்னும் சில மாதங்களில் தொடங்க பட உள்ளது.

தமிழ் சின்னத்திரை ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளில் முக்கியமான ஒரு இடத்தைப் பிடித்திருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். நான்கு சீசன்கள் கடந்த நிலையில் இப்போது ஐந்தாவது சீசனுக்கான பணிகள் தொடங்கப்பட்டு வருகின்றன. விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என சொல்லப்படுகிறது. கடந்த நான்கு சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசனே இந்த சீசனையும் தொகுத்து வழங்குவார் என்பது உறுதியாகியுள்ள நிலையில் அக்டோபர் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்குள் கமல் விக்ரம் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு வருவார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் கமல் சம்மந்தப்பட்ட ப்ரோமோ காட்சிகள் படம்பிடிக்கப்பட்டுள்ளன. நான்கு ப்ரோமோக்கள் படமாக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் அது வெளியாகும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்