இந்த நிலையில் தமிழக அரசின் இந்த திட்டத்திற்கு கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டுமென்பது மநீமவின் செயல்திட்டங்களுள் ஒன்று. தேர்தல் வாக்குறுதியிலும் குறிப்பிட்டிருந்தோம். கேரளத்தில் முன்னரே சாத்தியமானது இப்போது தமிழகத்திலும் நிகழ்ந்தேறி இருக்கிறது. இந்த மாற்றம் இந்தியாவெங்கும் நிகழ வேண்டும். தமிழக அரசுக்கு பாராட்டுக்கள்
கமல்ஹாசனின் இந்த டுவிட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக பிரமுகரும் நடிகையுமான காயத்ரி ரகுராம் கூறியிருப்பதாவது: நீங்கள் கோவிலுக்குச் சென்று கடவுளைத் தரிசிக்கவில்லை என்றால் இது தான் உங்கள் அறிவாக இருக்கும். பிராமணரல்லாத மற்றும் அனைத்து சாதி அர்ச்சகர்களையும் கொண்ட பல கோவில்கள் உள்ளன. இந்த அரசாங்கம் புதிதாக எதையும் கொண்டு வரவில்லை. திமுக, ஆகம விதி உள்ள கோவில்களில் மட்டுமே திணிக்க முயற்சி