நான் சரியான வில்லிடி... பிரியங்காவை மிரட்டிய தாமரை - ப்ரோமோ வீடியோ!

சனி, 20 நவம்பர் 2021 (15:35 IST)
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இந்த முறை வெற்றியாளராக நிச்சயம் ராஜு முதல் இடத்தை பிடிப்பார் என ஆடியன்ஸ் ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகின்றனர். அடுத்த இடத்தில் அண்ணாச்சி இருக்கிறார். அபிஷேக் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு தான் பிரியங்கா ஓரளவிற்கு மக்களுக்கு பிடித்த போட்டியாளராக பார்க்கப்படுகிறார். 
 
இந்நிலையில் வாரத்தின் இறுதி நாளில் கமல் வந்த ப்ரோமோ வீடியோ நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை அதிகரித்திருக்கிறது. அதில் பிரியங்கா மற்றும் தாமரை உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி விளையாட்டை விளையாட வைக்கிறார். 
 
அப்போது தாமரை பிரியங்காவை பார்த்து,  " அபிஷேக் மற்றும் சிலர் மீது மட்டும் நீங்கள் பாசமாக இருந்தீர்கள். உங்க மேல ஒருத்தர் ரொம்ப அன்பா இருப்பாங்க அவங்க தான் தாமரை. அப்படி ஒருத்தரிடம் நீ இதுவரை அன்பாக இந்திய என்பது தெரியவில்லை. ஆனால், வில்லி சரியான வில்லி என கூறி மிரட்டுகிறார் தாமரை. அப்போது பிரியங்காவின் மைண்ட் வாய்ஸ், " நீயா? நானா? உன்ன போய் கேம் புரிஞ்சு விளையாடுறன் =னு சொன்னேன் பாரு" என்பது தான். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்